ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு!

May 12, 2020 08:49 AM 755

கடந்த சில வாரங்களாக, காபூல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காபூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு சம்பவங்களில், ஒரு குழந்தை உட்பட 4 அப்பாவி மக்கள் படுகாயமடைந்தனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted