அயோத்தியை தொடர்ந்து மேலும் 4 வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு

Nov 10, 2019 10:37 AM 80

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மேலும் நான்கு முக்கிய வழக்குகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை, அவர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நேற்று வழங்கியது. இந்த நிலையில், ஓய்வு பெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மேலும் நான்கு முக்கிய வழக்குகளில், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு, ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான வழக்கு, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. இதேபோல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் கொண்டுவர வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கிலும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

Comment

Successfully posted