தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி

Sep 21, 2019 04:05 PM 117

திருவள்ளூர் தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 17 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பெரியகுப்பம், பாண்டூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் வீட்டுக்கடன் கோரி போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் தனது பதவியின் மூலம் 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனைக் கண்டறிந்த முதன்மை மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மேலாளர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உதவி புரிந்த சதீஷ், கார்த்திகேயன் ஆகிய மூவரையும் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனை அடுத்து போலி ஆவணங்கள் கொடுத்துக் கடன் பெற்ற 7 பேரையும் தற்போது காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted