இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு!

Dec 15, 2019 06:08 PM 543

முந்தைய கல்வி ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இப்போது உயர்கல்வி பயின்றுவரும் மாணவர்களுக்கு நாளைக்குள் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2017-2018, 2018-2019 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அவர்கள் உயர்கல்வி பயின்று வருவதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டு டிசம்பர் 16ஆம் தேதிக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக மடிக்கணினிகள் தேவைப்பட்டால் தேவைப்பட்டிலைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 17ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போகக் கூடுதலாக மடிக்கணினிகள் இருந்தால் எவ்வளவு உள்ளன என்கிற விவரத்தைப் பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comment

Successfully posted