தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

Jun 12, 2019 07:56 AM 127

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மத்திய மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய மாநில அரசு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான காலி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருவதற்கு, மாணவர்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted