அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில் நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 26, 2020 06:25 AM 440

அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில், இந்திய குடிமைப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு, இலவச சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி அளிக்க அம்மா ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய தேர்வாணையம், குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஏதுவாக முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு, 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' பயிற்சி மையம் சார்பில், சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள், ஆளுமைத் தேர்வும், ஒரு நாள் சிறப்பு வகுப்பும் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு www.ammaiasacademy.com என்ற இணையதளத்திலும், 0422 - 2472222 என்ற தொலைபேசி எண்ணிலும், 87606 74444 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted