நண்பனின் 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்

Oct 15, 2019 09:38 PM 91

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் தனது நண்பரான ஆனை மலையைச் சேர்ந்த முருகன் என்பரை சந்திக்க சென்றுள்ளார்.

தனது நண்பரோடு பேசிக்கொண்டிருந்த கார்த்திக் அவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த முருகனின் 5 வயது மகளை வெளியில் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. குழந்தையோடு வெளியே சென்ற கார்த்திக் நீண்டநேரமாகியும் திரும்பி வராததால் முருகனும் அவரது மனைவியும், அக்கம் பக்கத்தினருடன் பதறி அடித்து தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மறைவு பகுதியில் அழுதுக் கொண்டிருந்த முருகனின் குழந்தையோடு, கார்த்தியை பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.
மேலும், கார்த்திக் தனது நண்பனின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் அந்த குழந்தை அழுது கொண்டிந்தது என்று தெரியவந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார்த்திக்கு தர்ம அடி கொடுத்து, ஆனைமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதால் படுகாயமடைந்த கார்த்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட முருகனின் குழந்தைக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted