தோழியின் குளிக்கும் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டிய நண்பர்!

Dec 06, 2020 10:22 AM 393

சென்னை வியாசர்பாடியில், பெண் குளிப்பதை வீடியோ எடுத்து 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையை வாங்கி ஏமாற்றிய நபர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வியாசர்பாடியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அப்பெண்ணுக்கும், முருகேசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை ரமேஷ் தீர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில், அப்பெண்ணின் குளிக்கும் வீடியோ முருகேசனிடம் இருப்பதாகவும், 20லட்ச ரூபாய் கேட்டு அவர் மிரட்டுவதாகவும் பெண்ணிடம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அப்பெண் 3 லட்ச ரூபாய் மற்றும் 10 சவரன் நகையை ரமேஷிடம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு பணம் கேட்டு ரமேஷ் மிரட்ட, சந்தேகமடைந்த அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், முருகேசனின் பெயரை பயன்படுத்தி அப்பெண்ணிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Comment

Successfully posted