சென்னையில் இருந்து சுமார் 4லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

Jan 13, 2020 11:16 AM 516

பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் போன்ற 6 இடங்களில் இருந்து 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 4லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் தேதியில் இருந்து 8,192 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 4லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

Comment

Successfully posted