கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம்

Sep 10, 2019 07:16 PM 180

மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு கோடியே 91 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயிலில், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 9, 14, 28, 30 ஆகிய நாட்களில் ஒரு நாளில் மட்டும் கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மெட்ரோ நிர்வாகம், இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் வெற்றி கண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted