ஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்!

May 30, 2020 11:10 AM 1209

தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள விசாரணை அறைகளிலிருந்தே வழக்குகளை விசாரிக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதிகள் தங்கள் லேப்டாப் அல்லது I-PAD-யை நீதிமன்றத்திற்கு கொண்டு வர தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆன்லைன் முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்யும் நடைமுறை தொடர வேண்டிய நிலை நீடிக்கிறது என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted