பறக்கும் படையினர் ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிப்பு

Apr 16, 2019 02:55 PM 56

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர், ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர். இதற்காக தலைமை செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து சி.விஜில் மற்றும் தொலைபேசி வாயிலாக புகாரை பெறும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சி.விஜில் மற்றும் தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாரை, தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலைக்குழுவினர் விரைந்து விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்வர். அவ்வாறு செல்லும் அவர்கள், ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted