திருமண கோலத்தில் கஜா நிவாரண நிதி திரட்டிய மணமக்கள்

Dec 02, 2018 06:26 PM 369

தங்கள் திருமணத்திற்கு வந்தவர்களிடம் கஜா புயலுக்காக, மணமக்கள் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் போடி செட்டித்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மணமக்கள் தினேஷ்குமார் -திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மணமக்கள், உண்டியல் மூலம் நிவாரண நிதியை வசூல் செய்தனர்.

தங்கள் திருமண நேரத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்ட நிதி வசூல் செய்த, மணமக்களின் மனித நேயமிக்க செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Comment

Successfully posted