ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் - வீரர் பி.சி.சி.ஐ-யிடம் புகார்

Oct 04, 2020 11:22 AM 1032

ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் செய்வதற்காக இடைத்தரகர் ஒருவர் தன்னை அணுகியதாக வீரர் ஒருவர் பி.சி.சி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல். தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டிகளில் சூதாட்டம் செய்வதற்காக இடைத்தரகர் ஒருவர் தன்னை அணுகியதாக வீரர் ஒருவர் பி.சி.சி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வீரரின் புகாரை பெற்றுக் கொண்ட பி.சி.சி.ஐ, அந்த இடைத்தரகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இடைத்தரகர் அணுகியிருப்பது தெரியவந்துள்ளது. புகார் அளித்த வீரரின் பெயரை அறிவிக்க மறுத்த பிசிசிஐ, சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்ற பிறகு முழு தகவலும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted