விநாயகர் சதுர்த்தி திருநாள் - அதிமுக வாழ்த்து

Sep 09, 2021 11:05 AM 1260

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களிடம் அன்பும், அமைதியையும் நிறையட்டும் என அதிமுக தலைமை வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றியே விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஞானமே வடிவான திருமேனியை கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியையும் நிறையட்டும்; நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் என்றும் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதி தவழட்டும் என்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது வழியில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

Comment

Successfully posted