மருந்து தொழிற்சாலையில் வாயுக் கசிவால் 2 பேர் உயிரிழப்பு!

Jun 30, 2020 01:31 PM 316

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாகப்பட்டினம் அடுத்த பரவாடா பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பென்சி மிடாசோல் வாயு கசிவு ஏற்பட்டதால், அதை சுவாசித்த 6 ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தொழிற்சாலை மூடப்பட்டதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Comment

Successfully posted