கடலுக்கடியில் திடீர் வெடிப்பு -தீயை அணைக்கும் பணியில் கப்பல்கள் தீவிரம்..

Jul 04, 2021 10:38 AM 2802

மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் தொடங்கியுள்ளன.. விபத்து பற்றி அறிந்த கடல்படை காவல்துறையினர்  கப்பல்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

image

கடலுக்கடியில் 78 மீட்டருக்கு கீழ் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டு இந்த வெடிப்பு நிகழ்ந்து கடலின் மேற்பகுதி வரை கொந்தளித்துள்ளது. எரிமலைக் குழம்பு போல தோற்றமளிக்கும் இந்த காட்சிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பார்ப்பவர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...

image

காலை 5 மணிக்கு பற்றிய தீயை  10.45 மணியளவில் மூன்று தீயணைப்பு கப்பல்கள் ஈடுபட்டு அணைத்தன. 


image
இந்த எரிவாயு கசிவால் பெரியளவில் பாதிப்போ,உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தற்ப்போது தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்மந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

image

வியப்பை ஏற்படுத்திய வீடியோவை பார்க்க...

 

Comment

Successfully posted