ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு குழாய் வெடிப்பு : 33 பேர் உயிரிழப்பு

Jan 03, 2019 09:31 AM 422

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பின் காரணமாக 33 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் இருந்து மேக்னிடோகார்க் என்ற இடத்தில் பல அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை எரிவாயு குழாயில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அக்கட்டத்தின் ஒரு பகுதி தரைமட்டமானது. இதனையடுத்து மீட்பு குழுவினர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

கட்டிடத்தில் மைனஸ் 23 டிகிரி செல்யஸிஸ் வெப்பநிலையில் இரண்டு நாட்கள் இருந்த 11 மாத குழந்தையை மோப்ப நாய் உதவியுடன் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Comment

Successfully posted