மக்களவைத் தேர்தல்: டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காம்பீர் நிறுத்தம்

Apr 23, 2019 07:11 AM 327

டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நிறுத்தப்பட்டுள்ளார்.

கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதில், ஏற்கெனவே 4 தொகுதிகளுக்கு பாஜக தனது வேட்பாளரை அறிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கொண்டு 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதன்படி, புதுடெல்லியில் மூத்த தலைவர் மீனாக்ஷி லெகி போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டெல்லி தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted