சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காம்பீர் ஓய்வு

Dec 04, 2018 10:57 PM 112

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.

அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் விலக உள்ளதாக காம்பீர் குறிப்பிட்டுள்ளார். டெல்லி பெரோஸா கொட்லா மைதானத்தில் டெல்லி - ஆந்திரா இடையே வியாழக்கிழமை நடைபெறும் ரஞ்சிக் கோப்பை போட்டியே இவரது கடைசி ஆட்டம் என கூறப்படுகிறது.

37 வயதான கவுதம் காம்பீர் 58 டெஸ்ட் போட்டிகளிலும், 147 ஒரு நாள் போட்டியிலும், 37 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது ஆட்டத்தை தொடங்கிய காம்பீர், 2016 ஆம் ஆண்டு கடைசியாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதனைத்தொடர்ந்து இந்திய அணியில் இடம் அளிக்கப்படாத நிலையில், தற்போது அவர் எடுத்துள்ள இந்த முடிவு, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comment

Successfully posted