உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் நல்ல விடியல் கிடைக்கும்

Jan 25, 2019 01:22 PM 294

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட நிறுவனங்களின் பின்புலங்கள் குறித்து ஆராய உத்தரவிடக் கோரியும், உரிய விதிமுறைகளை வகுக்க கோரியும் தனியார் நிறுவனம் ஒன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி தள்ளுபடி செய்தனர்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பான முயற்சி எடுத்துள்ளதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் நல்ல விடியல் கிடைக்கும் என நம்புவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Comment

Successfully posted