கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து!

Aug 02, 2020 08:48 AM 524

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில், ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 11 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படை வீரர்கள், கிரேனுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான கிரேனை, பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தான் நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது.

 

Comment

Successfully posted