நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்!- அன்புமணி ராமதாஸ்

Mar 30, 2021 11:16 AM 666

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதி பாமக வேட்பாளர் கார்த்திக்கேயனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மங்கலம்பேட்டை மற்றும் பாலக்கரையில், பரப்புரையின் போது பேசிய அவர், விவசாயிகளின் நலனை காத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சாதாரண கணக்கிற்கு கூட தடுமாறும் ஸ்டாலினுக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மேம்படுத்திய அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted