பொங்கலை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Jan 12, 2020 07:01 AM 864

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தையில் பொங்கலை முன்னிட்டு 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும், சனிக்கிழமை அன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இதில், பல்வேறு  மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருகை தருகின்றனர். வழக்கமாக நடைபெறும் ஆட்டுசந்தையில் 2 கோடி ரூபாய் வரையும், திருவிழாக்காலங்களில் 4கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை என்பதால் ஆட்டு சந்தை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஆடுகளின் வரவு அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் ஆடுகள் வரை விற்பனையாகியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட ஒரு கோடி ரூபாய் அதிகம் என்றூம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Comment

Successfully posted