தங்கம் விலை சவரனுக்கு இவ்ளோ குறைவா?

Sep 17, 2021 01:08 PM 5342

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவைதை அடுத்து, சென்னையிலும் இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

நேற்று(16.09.2021) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4 ஆயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று(17.09.2021) ஒரே நாளில் 50 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து 34 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் சவரன் 37 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து, 65 ரூபாய் 50 காசுகளாகவும், வெள்ளி ஒரு கிலோ 150 ரூபாய் குறைந்து, 65 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted