தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Nov 20, 2019 12:09 PM 238

சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 232 ரூபாயாக விற்பனையாகிறது.

கடந்த இரண்டு தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 815 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 520 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 654 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 48 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Comment

Successfully posted