தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை

May 04, 2021 01:38 PM 1787

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

அந்த வகையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 811 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 452 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 616 ரூபாயாகவும் விற்பனையாகிறது...

அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 30 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted