தங்கம், வெள்ளி விலை உயர்வு

Apr 07, 2021 01:07 PM 619

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து 34ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனையாகிறது

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, 37ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிராம் 39 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 39 ரூபாய் அதிகரித்து 4ஆயிரத்து 297 ரூபாய்க்கும், சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து 34ஆயிரத்து 376 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 50 காசுக்கும் 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 500க்கும் விற்பனையாகிறது.
Comment

Successfully posted