இன்று முதல் கட்டாயமா ? ஹால் மார்க் முத்திரை - 256 மாவட்டங்களில் அமல்

Jun 16, 2021 11:34 AM 3365

தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால், ஹால்மார்க் முத்திரை கொண்ட 14,18,22 கேரட் தங்க நகைகளை மட்டும் விற்பனை செய்ய முடியும். தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறந்த பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ஹால் மார்க் முத்திரை மூலம் இந்தியாவை ஒரு உலகளாவிய தங்க சந்தை மையமாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Comment

Successfully posted