அதிகரித்து வரும் தங்கத்தில் விலை; சவரன் ரூ.30 ஆயிரம் எட்டும் என எதிர்பார்ப்பு

Aug 25, 2019 06:04 PM 416

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்படுள்ள நிலையில், தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலையால், உலக பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சர்வதே சந்தையில் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரணுக்கு 640 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து, 440 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 49 ரூபாய் 20 காசுக்கு விற்பனையானது. உலக அளவில் தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்பட்டு வரும் நிலையில், உலக பொருளாதார பாதிப்பின் காரணமாக தங்கம் விலை சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted

Super User

If we don't buy or give importance to gold, the price may fall down.