தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு

Aug 12, 2019 06:56 PM 129

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன், 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு168 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 603 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted