சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு!

Mar 05, 2021 12:16 PM 10014

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 572 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 181 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 69 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 600 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Comment

Successfully posted