இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன?

Jul 28, 2021 06:13 PM 8633

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் விற்பனையாகி வரும் நிலையில் இன்று(28.07.2021) மாலை தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூபாய் ரூ.40 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,507-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.36,056-க்கு விற்பனையாகிறது.

இதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து, ஒருகிராம் வெள்ளி ரூ. 71.20-க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Comment

Successfully posted