திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Nov 29, 2018 11:59 AM 441

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த 5 பயணிகளிடம் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியாவிலிருந்து, ஏர் ஏசியா விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த ஜி.யு மாக்கான், இளையான் குடியை சேர்ந்த சம்சூதீன் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, டார் லைட் மற்றும் எலக்ரிக் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 6 கிலோ மற்றும் 6 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று, மலேசியாவின்
மலிந்தோ விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் ஜெய் மனிஷா என்பவரிடம் இருந்து, 38 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

Comment

Successfully posted