கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் கடத்தல்

Nov 23, 2018 01:27 PM 519

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தொண்டியை சேர்ந்த ஜபீர் அகமது மற்றும் திருவாரூரை சேர்ந்த அமுதா ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜரினா ஆகியோரிடம் சோதனை செய்ததில் கைப்பையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted