நல்லாட்சி தொடர வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

Apr 06, 2021 12:26 PM 844

தமிழகத்தில் தற்போது நடைபெறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியில் நடமாடக்கூடிய நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும் என அவர் கூறினார்.

image

Comment

Successfully posted