தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது!!

Aug 17, 2020 07:02 AM 1328

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் துவங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது. மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Comment

Successfully posted