கர்நாடகத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

Apr 07, 2021 12:57 PM 585

 போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பெரும்பாலான பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் தனியார் ஒட்டுநர்களின் உதவியுடன் அரசு பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல், பயணிகள் வசதிக்காக ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில பேருந்துகள் இயக்கப்படாததால் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக மாநில பேருந்துகள் வராததால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருவதால் அவற்றில் கூட்ட நெரிசல் காணப்படுகின்றன.


Comment

Successfully posted