தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து சனிக்கிழமை அரசு ஆலோசனை

Jun 18, 2021 09:46 PM 681

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை மேற்கொள்கிறது.

தமிழகத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், குறைந்த அளவிலான தளர்வுகளும், ஏனைய 27 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

கடந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஆலோசனையின்போது, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக, பொது போக்குவரத்து, சிறிய ஜவுளி கடைகள் திறப்பு, சிறிய வழிபாட்டு தலங்கள் திறப்புக்கு அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comment

Successfully posted