இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை

Dec 10, 2019 03:28 PM 578

தமிழகத்தில் முதல்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை ஹேம்நாத் என்ற இளைஞன் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் தனது வலது காலை இழந்தார். சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக்குழுக்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதிநவீன செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கொடுத்த தொடர் பயிற்சியின் மூலம் ஹேம்நாத், எவரின் உதவியுமின்றி செயல்பட முடிவதாக தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கு ஹேம்நாத் நன்றி தெரிவித்தார்.

Comment

Successfully posted