அரசு மதுபான கடையை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

Jul 08, 2020 07:42 PM 646

மதுரையில் அரசு மதுபான கடையை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மதுபானக்கடைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி இரவு நேரத்தில் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted