ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Aug 05, 2020 07:46 PM 703

ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், உடற்பயிற்சியக உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் உடற்பயிற்சி கூடங்களும் வரும் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம் என்றும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் விரைவில் தனியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted