மக்களின் பசியை போக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது : முதலமைச்சர்

Feb 15, 2020 02:30 PM 272

மக்களின் பசியை போக்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயார் செய்யும் புதிய உணவுக்கூடத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கலவை சாதம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கருப்புக் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முட்டை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 43 ஆயிரத்து 233 சத்துணவு மையங்கள் மூலம் 5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர் என்றும்,  அம்மா உணவக திட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Comment

Successfully posted