அரசு பள்ளிகளில் சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

Aug 11, 2018 01:03 PM 391
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுத்தமான குடி நீர் வசதி ஏற்படுத்தப்படும் என்று, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப, 2 ஆயிரத்து 448 அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  48 கோடியே 96 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.

Comment

Successfully posted