”கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழிமுறையை அரசு துரிதப்படுத்த வேண்டும்”

Jun 08, 2021 09:43 AM 840

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு பொது இன்சூரன்ஸ் வழங்கும் இன்சுரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கான நடைமுறைகளை அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வலியுறுத்தி உள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் கிடைப்பதற்கான வழிமுறையை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

 

Comment

Successfully posted