பட்டாசு தொழிலாளர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Oct 27, 2018 03:27 PM 719

பட்டாசு உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்கும் என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் மற்றும் உலக உணவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சிவகாசியில் தொடங்கியது. இதை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

அவர் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சத்தான உணவை எடுத்துக் கொள்வது தொடர்பாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு தொழிலாளர்களை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted