மாங்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

Apr 09, 2020 01:32 PM 986

மாங்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சப்பட்டை மாங்காய், கிளிமூக்கு மாங்காய், பஞ்சவர்ணம் மாங்காய்கள் விளைவிக்கப்படுகிறது. தற்போது இந்த மாங்காய் மரங்களில் புழுக்கள் தோன்றி பெரும் பாதிப்பை ஏற்டுத்துவதாகவும், மருந்துகள் அடித்தும் பயன் இல்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் தற்போது ஊரடங்கால் மாங்காய்களை பறிப்பதற்கு வேலையாட்கள் இல்லை எனவும், இருப்பவர்களை கொண்டு மாங்காய்களை பறித்தாலும் கிலோ 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே மாங்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து அதற்கு உரிய தொகை வழங்கும் வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted