தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 வாகனங்களை ஆளுனர் வழங்கினார்

Oct 12, 2018 03:58 PM 297

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதற்காக, 18 வாகனங்களை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி சென்ற அவர், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று, மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்ற ஆளுநர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Comment

Successfully posted