தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் ஆளுநர் ஆலோசனை

Oct 24, 2018 01:32 PM 394

தமிழக அரசியல் நிலவரம் குறித்து, மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருக்க திட்டமிட்டுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசின் நலத்திட்டங்கள், மாநில வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted