தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா

Jan 14, 2020 07:29 PM 787

தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில், துணை குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, தமிழகம் மற்றும் தெலங்கானா ஆளுநர்கள்,  அமைச்சர்கள் உட்பட  பலர்  உற்சாகமாக  பங்கேற்றனர்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், துணை குடியரசு தலைவர் வெங்கயநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவை முன்னிட்டு வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த பொங்கல் நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை துணை குடியரசு தலைவர் வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் , சபாநாயகர் தனபால் , தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியினை அவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Comment

Successfully posted